கலாசார பெருமைகளை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: ஐகோர்ட்டு நீதிபதி வேண்டுகோள்

நமது கலாசார பெருமைகளை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அனிதா சுமந்த் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2018-03-11 21:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி கோர்ட்டில் மகளிர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு புதுவை தலைமை நீதிபதி தனபால் தலைமை தாங்கினார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அனிதா சுமந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மகளிர் தினத்தையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பெண் வக்கீல்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் அவர் பேசும்போது, பெண்கள் நமது கலாசார பெருமைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், எந்த ஒரு சூழலையும் நிர்வகிக்க பெண்களுக்கு தெரிய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் பொதுவான பிரச்சினைகள் குறித்து பெண்கள் தங்களுக்குள் ஆலோசிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விழாவில் நீதிபதிகள் ராம திலகம், சோபனாதேவி, வக்கீல் சங்க தலைவர் திருக்கண்ண செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மணவெளி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் நடந்த மகளிர் தினத்தில் கோலப்போட்டி நடந்தது. விழாவுக்கு மகளிர் அணி தலைவர் சுமதி தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் ஹேம மாலினி முன்னிலை வகித்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மணவெளி தொகுதி பாரதீய ஜனதா நிர்வாகிகள் சுகுமாரன், அசோக், கார்த்திகேயன், குணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்