ஓசூரில் லாரி மீது கார் மோதி முதியவர் பலி மனைவி படுகாயம்

ஓசூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். உடன் சென்ற அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.

Update: 2018-03-11 22:30 GMT
ஓசூர்,

கர்நாடக மாநிலம், பெங்களூரு விவேக் நகரை சேர்ந்தவர் துவாரகா நாதன் (வயது 76). இவரது மனைவி விசாலாட்சி (65). இவர்கள் இருவரும், நேற்று மதியம் பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரியை, துவாரகா நாதன் முந்தி செல்ல முயன்றார்.

அப்போது லாரி மீது கார் உரசியதால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த துவாரகா நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விசாலாட்சி, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்