வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்

வீட்டுமனை பட்டா வழங்க கோரி உழைக்கும் பெண்கள் இயக்கம் சார்பாக யூனியன் ஆபிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-03-11 20:13 GMT

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி உழைக்கும் பெண்கள் இயக்கம் சார்பாக வீட்டுமனை பட்டா வழங்க கோரி யூனியன் ஆபிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் பம்பையம்மாள் தலைமை தாங்கினார். அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக அமைப்பாளர் மல்லிகா ஆர்பாட்டத்தை தொடக்கி வைத்தார். இதில் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் சசிகலா ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். முடிவில் கச்சைகட்டி கிளை செயலாளர் ஈஸ்வரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்