திருப்போரூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் சாவு
திருப்போரூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த குமிழி அருகே உள்ள ஒத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மகன்கள் ஜஸ்டின் (வயது 11), ஜெபஸ்டின் (7). அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வந்தனர்.
விடுமுறையான நேற்று இரு சிறுவர்களும் ஒத்திவாக்கம் ஏரியில் குளிக்க ஆசைப்பட்டனர். இதனால் தங்கள் தாய் மாமாவான வேல்முருகனுடன் (30) ஏரிக்கு சென்றனர். அவர் தூத்துக்குடியை சேர்ந்தவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார்.
ஏரியில் ஆங்காங்கே மணல் எடுக்கப்பட்டு பள்ளங்கள் உள்ளன. இது தெரியாமல் 3 பேரும் ஏரியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளம் தோண்டிய பகுதியில் சிறுவர்கள் இருவரும் மூழ்கினர். இதை கண்டு வேல்முருகன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே 2 சிறுவர்களையும் காப்பாற்ற வேல்முருகன் அப்பகுதிக்கு சென்றார். அப்போது அவரும் அந்த பள்ளத்தில் உள்ள ஏரி தண்ணீரில் மூழ்கினார்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் இது பற்றி தீயணைப்பு படையினர் மற்றும் காயார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு 3 பேரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து 3 பேரின் உடல்களையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.