நாகை மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வை 3,889 பேர் எழுதினர்

நாகை மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வை 3,889 பேர் எழுதினர்.

Update: 2018-03-11 22:30 GMT
நாகப்பட்டினம்,

தமிழகத்தில் சீருடை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வுக்கு மொத்தம் 4 ஆயிரத்து 508 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 ஆயிரத்து 889 பேர் தேர்வு எழுதினர். 619 பேர் தேர்வு எழுதவில்லை. நாகை மாவட்டத்தில் மொத்தம் 2 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வினை ஐ.ஜி. (செயலாக்கம்) சந்திரசேகரன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர்தேஷ்முக் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து ஐ.ஜி. சந்திரசேகரன் கூறிய தாவது:- தமிழகத்தில் இன்று (நேற்று) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சீருடை பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது.

தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை வசதி, கழிவறை வசதி, தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை கண்காணிக்க பறக்கும் படையும், பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்