காவிரி மேலாண்மை வாரியம் தள்ளிப்போடுவதை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போடுவதை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என நாகூரில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
நாகப்பட்டினம்,
மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா நேற்று நாகூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை மத்திய சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி ரிஸ்வான் பாஷா இன்று (நேற்று) காலை மரணமடைந்துள்ளார். சமீபத்தில்தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திண்டுக்கல்லில் நடைபெற்றபோது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார். இதனால் ரிஸ்வான்பாஷா தனக்கும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் முஸ்லிம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு கிடையாது என்ற தகவல் பரவியதால் அவர் மனவேதனையடைந்து மரணம் அடைந்துள்ளார்.
சிறைகளில் போதிய மருத்துவவசதியில்லை. நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை. ரிஸ்வான் பாஷாவின் மரணத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். உடனடியாக தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். சிறையில் மரணமடைந்த ரிஸ்வான் பாஷா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
நரேந்திரமோடி தலைமை யிலான மத்திய அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிபோடுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில செயலாளர் ஹாஜாஹனி, மாநில அமைப்பு செயலாளர் அமீன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜபருல்லா, ம.ம.க. மாவட்ட செயலாளர் இபுராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.