ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு: ராகுல் காந்தியின் பெருந்தன்மையை காட்டுகிறது முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேட்டி
ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு ராகுல் காந்தியின் பெருந்தன்மையை காட்டுகிறது என முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேட்டி அளித்துள்ளார்.
கடத்தூர்,
முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு சென்றார். செல்லும் வழியில் கோபி பெரியார் திடல் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்£ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சிங்கப்பூரில் ராகுல்காந்தி பேசியபோது ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டதாக கூறி உள்ளார். இது அவருடைய (ராகுல் காந்தி) பெருந்தன்மையை காட்டுகிறது,’ என்றார். பேட்டியின் போது ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.