ஏரியூர் அருகே முன்விரோதத்தில் தகராறு; 11 பேர் மீது வழக்கு
ஏரியூர் அருகே உள்ள சிகரல அள்ளியில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது.
ஏரியூர்,
ஏரியூர் அருகே உள்ள சிகரல அள்ளியில் காமாட்சியம்மன் கோவிலில் திருவிழாவுக்கு வரி வசூலிப்பதில் ராஜி, சரவணன் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று காலை சரவணன் தனது ஆதரவாளர்கள் 10 பேருடன் ராஜி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் தரப்பினர் ராஜி மற்றும் அவருடைய மனைவி ராமி, மகன் மூர்த்தி ஆகிய 3 பேரையும் தாக்கினர். மேலும் அவருடைய வீட்டையும் அவர்கள் அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக அவர் ஏரியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சரவணன் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.