சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதில் யானை மீது பூக்கூடையை வைத்து எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.
சமயபுரம்,
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில், அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய அருள் அம்சமாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம்.
மேலும் சமயபுரம் மாரியம்மன் தன்னை நாடி வருவோருக்கு மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார். மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது.
இதைத்தொடர்ந்து காலை 6.45 மணிக்கு கொடி மரத்தில் இருந்து கோவில் நிர்வாகத்தின் சார்பாக இணை ஆணையர் குமரதுரை தலைமையில், கோவில் அர்ச்சகர் யானை மீது பூக்கூடையில் பூக்களை வைத்துக்கொண்டு மேளதாளங்கள் முழங்க வர, அதைச்சுற்றி முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் துரை.ராஜசேகர், சுழல்முறை அறங்காவலர் வெங்கடேஷ் உத்தமநம்பி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பூக்கூடைகளிலும், தட்டுகளிலும் பூக்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலம் தேரோடும் வீதி, கடைவீதி வழியாக கோவிலை வந்தடைந்ததும், காலை 7.05 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் சுமந்து வந்த பூக்களை கோவில் அர்ச்சகர்கள் அம்மனின் மேலே கொட்டினர். தொடர்ந்து பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் “ஓம் சக்தி, மகா சக்தி“ என்று பக்தி கோஷங்களை எழுப்பி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து மருதூர், வீ.துறையூர், மாகாளிகுடி, பனமங்கலம் போன்ற கிராமங்களில் இருந்து பக்தர்கள் சுமந்து வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டது. காலை 8 மணியில் இருந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தியும், மாலை அணிந்தும் பாதயாத்திரையாக வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றினர். பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்திருந்தனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் செய்து இருந்தது. பல்வேறு அமைப்புகள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று(திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை கட்டணமில்லாமல் அம்மனை தரிசிக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்்ந்து அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 2, 3 மற்றும் 4-ம் வார பூச்சொரிதல் விழா நடைபெறும்.
பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையின் சார்பாக திருச்சி, துறையூர் போன்ற இடங்களில் இருந்து சமயபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண் உத்தரவின்பேரில், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு மேற்பார்வையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நடமாடும் கேமரா பொருத்திய வாகனத்திலும், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கம், லால்குடி ஆகிய இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்களும், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோவிலின் முன்புறமும், கடைவீதியிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.