அரியலூர் மாவட்டத்தில் 102 பயனாளிகளுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டன
அரியலூர் மாவட்டத்தில் 102 பயனாளிகளுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டன.
அரியலூர்,
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் பணிபுரியும் மகளிர் தங்களது அலுவலகங்களுக்கு எளிதில் சென்று வருவது உள்ளிட்டவற்றுக்காக 50 சதவீதம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பணிபுரியும் மகளிர்க்கான அம்மா ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 102 பயனாளிகளுக்கு அம்மா ஸ்கூட்டரை வழங்கி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில், இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியமாக ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் பாதி இவற்றில் எது குறைவோ அத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது. வாகனங்களை சொந்த நிதியிலிருந்தும், வங்கிகடன் மூலகமாகவும் வாங்கலாம்.
அரியலூர் மாவட்டத்திற்கு ஊரக பகுதிகள் 967 பயனாளிகளுக்கும் மற்றும் நகர்ப்புறபகுதிகள் 121 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 1,088 பயனாளிகளுக்கு அரியலூர் மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை மகளிர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில், இரு சக்கர வாகனம் பெற்ற பயனாளிகள் அனைவரும் முதலில் சாலை விதிகளை கடைபிடித்து பயணிக்க வேண்டும். குறிப்பாக, தலைகவசம் அணிந்து வாகனத்தினை சீரான வேகத்தில் இயக்கி போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டம் உழைக்கும் பெண்களுக்கான பணிசுமையை குறைக்க உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் (ஊரகவளர்ச்சி முகமை) லோகேஷ்வரி மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திட்ட இயக்குனர் (தமிழ்நாடுஊரகவாழ்வாதார இயக்கம்) லலிதா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் முடிவில் உதவி திட்ட அலுவலர் (தமிழ்நாடுஊரகவாழ்வாதார இயக்கம்) சரவணபாண்டியன் நன்றி கூறினார்.