4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
வேலூர்,
வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், வேலூர் தனித் தாசில்தார் செல்வராஜ், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலைவாணி, ரமாநந்தினி ஆகியோர் அடங்கிய குழுவினர் ரெயில் நிலையங்கள், பேரணாம்பட்டு பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவுக்கு கடத்துவதற்காக மேற்கண்ட பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் வேலூர் வேலப்பாடியில் வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முறைகேடாக கடைகளில் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, மொத்தம் 11 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.