விவசாயிகளுக்கு சாதகமாக செயல்படாத மத்திய மாநில அரசுகளை தூக்கி எறியும் நேரமிது

நாசிக் மாவட்டத்தில் உள்ள கோல்ப் மைதானத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரணி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசியதாவது:–

Update: 2018-03-10 22:23 GMT

நாசிக்,

விவசாயமே ஒரு நாட்டின் முதுகெழும்பு. ஆனால் அரசாங்கமோ விவசாய நிலங்களை கைப்பற்றி தொழிற்சாலைகளும், மேம்பாலம் அமைப்பதிலும் குறியாக உள்ளது. மாநில அரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்று வேலை. இதனால் விவசாய உற்பத்தி குறைந்துள்ளது.

விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துள்ளது. விவசாயி கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் பொருளுக்கான விலையை உயர்த்துவதற்கு இந்த அரசுக்கு திராணி இல்லை. விவசாயிகளுக்கு சாதகமாக செயல்படாத மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறியும் நேரமிது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்