குமரகோட்டம் முருகன் கோவிலில் சிலை திருட்டு

குமரகோட்டம் முருகன் கோவிலில் கச்சியப்பர் சிலை திருடப்பட்டது தொடர்பாக போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Update: 2018-03-10 23:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் பிரசித்திபெற்ற குமரகோட்டம் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தெற்கு பிரகாரத்தில் ஒரு அடி உயரம் உள்ள கச்சியப்பர் வெண்கல சிலை வைக்கப்பட்டிருந்தது.

நேற்று மதியம் முதல் அந்த சிலையை காணவில்லை. மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது 50 ஆண்டுகள் காலம் பழமை வாய்ந்த சிலையாகும். உடனே இதுகுறித்து கோவில் செயல் அதிகாரி தியாகராஜனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிலையை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்