2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

கொலை வழக்கில் கைதான 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.;

Update: 2018-03-10 23:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாமல்லன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 50). விவசாயி. இவரது நிலம் காஞ்சீபுரம் அடுத்த கூரம் கேட் பகுதியில் உள்ளது. இவரது தாய்மாமன் சந்தியப்பன் (75). இவர் தமிழக நெடுஞ்சாலைத்துறை ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவருக்கும், இளங்கோவுக்கும் 2010-ம் ஆண்டு முதல் சொத்து தகராறு காரணமாக காஞ்சீபுரம் முன்சீப் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் இளங்கோ தனது மோட்டார் சைக்கிளில் நிலத்தை சுற்றி பார்க்க கூரம் கேட்டிற்கு சென்றார். அப்போது வழியில் ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தார்.

விசாரணையில் சந்தியப்பன் அவரது நிலத்தில் வேலை செய்யும் டெரிமைஸ் மற்றும் செம்பரம்பாக்கத்தை சேர்ந்த சாலமன், சதீஷ், காஞ்சீபுரம் முனிசிபல் காலனியை சேர்ந்த அறிவழகன் ஆகியோர் இந்த கொலையை செய்தது தெரியவந்தது.

இதையொட்டி சந்தியப்பன், டெரிமைஸ், சதீஷ், அறிவழகன், சாலமன் என்கிற இன்பநாதன் அகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சாலமன், அறிவழகன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரை செய்தார். அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவு வழங்கினார்.

இதற்கான உத்தரவை பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வேலூர் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

மேலும் செய்திகள்