காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தவர் கைது

போலீஸ்காரர் போல நடித்து காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-03-10 21:37 GMT

மும்பை,

மும்பை மெரின்லைன் கடற்கரையில் அமர்ந்திருந்த காதல் ஜோடிகளை மிரட்டி சம்பவத்தன்று போலீஸ்காரர் ஒருவர் பணம் பறித்துக்கொண்டு இருந்தார். இதனை வேடிக்கை பார்த்த 9 வயது சிறுவனை அந்த போலீஸ்காரர் பிடித்து வைத்து பேசிக்கொண்டிருந்தார். இந்தநிலையில் சிறுவனை தேடி அவனது தந்தை அங்கு சென்றார்.

அப்போது, அவர் சிறுவனை போலீஸ்காரருடன் பார்த்தார். இதில், சிறுவனின் தந்தைக்கு போலீஸ்காரரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர் இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு நின்ற போலீஸ்காரரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவரது பெயர் மன்னன் சேக்(வயது47) என்பதும், போலீஸ்காரர் போல நடித்து கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்