திருவள்ளூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்
காவலர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 7 ஆயிரத்து 218 பேர் எழுதுகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வுக்குழுமம் மூலமாக 2017-18-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக்காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொது எழுத்துத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 6 ஆயிரத்து 557 ஆண்கள், 661 பெண்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 218 பேர் எழுத உள்ளனர்.
தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு சரியான நேரத்திற்கு வரவேண்டும். விண்ணப்பதாரர் தேர்வுக்கூட நுழைவு சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார். தேர்வு மையத்தினை மாற்ற இயலாது. தேர்வு நுழைவு சீட்டு கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்.
விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டை ஏதேனும் இருப்பின் அவற்றின் நகலை கொண்டு வருவது உகந்தது (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவை), தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார். செல்போன், கால்குலேட்டர் போன்றவற்றை தேர்வு எழுதும் அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.