திறந்தவெளி சேமிப்பு மையத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் நெல்மூட்டைகளுடன் வரிசையில் நிற்கும் லாரிகள்
திறந்தவெளி சேமிப்பு மையத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் நெல்மூட்டைகளுடன் லாரிகள் வரிசையில் நிற்கின்றன. இதனால் கொள்முதல் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;
திட்டச்சேரி,
நாகை மாவட்டத்தில் விவசாயிகள் மேட்டூர் அணை தண்ணீர் மற்றும் பருவமழை ஆகியவற்றை நம்பி குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட சாகுபடிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காலத்தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துபோனது. அதைதொடர்ந்து காலதாமதமாக திறந்தவிடப்பட்ட தண்ணீரை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கினர். பயிர்கள் முளைத்து வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் சேதடைந்தது. இந்த முறை மட்டும் விவசாயிகள் ஒரு சாகுபடியை இரண்டு, மூன்று முறை செய்தனர். அதைதொடர்ந்து மிஞ்சிய பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வந்த நிலையில், பயிர்கள் கதிர்விட்டு வந்தபோது தண்ணீர் இன்றி கருக தொடங்கியது. இதனால் நெற்கள் பதர்களாக மாறியது.
இந்த நிலையில் மிஞ்சிய பயிர்கள் அறுவடைக்கு தயாரானதால், விவசாயிகள் அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வறட்சியின் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். இருப்பினும் கிடைத்த நெல்லை தற்போது விவசாயிகள் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். நாகை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நாகை மாவட்டத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களில் சேமிக்கப்படுகிறது. அதேபோல் திட்டச்சேரியை அடுத்த பனங்குடி ஊராட்சி சன்னமங்கலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகிறது. இங்கு நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு வரும் லாரிகள் ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாக நாகூர் - நன்னிலம் சாலையில் நீண்ட வரிசையில் நிற்கின்றன. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக திறந்தவெளி சேமிப்பு மையத்தில் நெல் மூட்டைகள் அடுக்குவதில் காலதாமதமாவதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் சேர்ந்து விடுகிறது. இதனால் நெல் கொள்முதல் செய்யும் பணியும் பாதிக்கப்படுகிறது.