நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-03-10 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் சிம்மவாகன காலசம்கார பைரவர் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தகட்டூர் பைரவர் கோவில்

இதேபோல் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பைரவர் கோவில் பல்வேறு சிறப்புகள் பெற்ற கோவிலாகும். வடக்கே காசியிலும், தெற்கே தகட் டூரில் மட்டுமே பைரவர் மூலவராக காட்சியளிக்கிறார். பல்வேறு சிறப்புகள் பெற்ற தகட்டூர் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்