ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரும்பாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதிய டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏரியூர்,
ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதிய டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை செயலாளர் பிரவின்குமார் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சக்திவேல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் எழில்அரசு, மாவட்ட தலைவர் வேலாயுதம், மாவட்ட துணை செயலாளர் சிவன், மாவட்ட குழு உறுப்பினர் சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெரும்பாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர டாக்டர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். டாக்டர்கள் இரவு நேரங்களில் தங்கி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்தாளுனர், போதுமான செவிலியர்களை பணி அமர்த்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.