சென்னையில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
மருத்துவ படிப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு ரத்து: சென்னையில் பா.ம.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை,
அகில இந்திய தொகுப்பு இடங்களில் மருத்துவ மேற் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து பா.ம.க. மாணவர் அணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில மாணவர் அணி செயலாளர் செஞ்சி செ.ரவி, அமைப்பு செயலாளர்கள் ரா.விஜயராஜா, கோபிநாத், பிரபு, முரளிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ஏ.கே.மூர்த்தி நிருபர்களிடம் கூறும்போது, “மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்தது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தான். தற்போதைய பா.ஜனதா அரசு அதனை ரத்து செய்துள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே, தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே 27 சதவீத இடஒதுக் கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் தா.தயாளன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.