ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி கார் உதிரிபாகங்கள் திருட்டு
ஆவடி அருகே ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி தொழிற்சாலையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கார் உதிரிபாகங்களை திருடிச்சென்ற மர்மகும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆவடி,
ஆவடி அடுத்த காட்டூர் சிட்கோவில் மகளிர் தொழிற்பேட்டையில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை அம்பத்தூர் அடுத்த பாடியை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகிறார். தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றனர். 3 வட மாநில ஊழியர்கள் மட்டும் தொழிற்சாலையில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் வேனில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் தொழிற்சாலைக்குள் புகுந்தது. பின்னர் கார் உதிரி பாகங்கள் இருந்த இடத்திற்கு சென்று அங்கு இருந்த உதிரிபாகங்களை திருட முயன்றனர். அப்போது வடமாநில ஊழியர்கள் அவர்களை தடுக்க முயன்றனர்.
அவர்களை கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் 3 பேரும் பயந்து ஓரமாக நின்றனர். உடனே கொள்ளையர் கள் கார் உதிரி பாகங்களை தாங்கள் வந்த வேனில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தொழிற்சாலை உரிமையாளர் கந்தசாமி ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் தொழிற்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.