உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: மத்திய அரசுக்கு, நாராயணசாமி எச்சரிக்கை
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16-ந் தேதி காவிரி நதிநீர் பிரச்சினையில் இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு முறையாக காவிரி நீர் கிடைக்க மத்திய அரசு 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழுவை அமைக்க உத்தரவிட்டது. பிரதமர் மோடி கடந்த மாதம் புதுச்சேரி வந்திருந்த போது நானும், அமைச்சர்களும் அவரை சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கடிதம் வழங்கினோம். ஆனால் இதுவரை பிரதமரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி மத்திய நீர்வளத்துறை செயலரிடம் இருந்து காவிரி நதிநீர் குறித்து பேச அழைப்பு விடுத்து தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் வந்தது. உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு குறிப்பிட்டுள்ளதால், அந்த விஷயத்தில் பேசுவதற்கு ஏதும் இல்லை. ஆனாலும் மத்திய அரசு அழைத்ததால் தலைமை செயலாளரும், நீர் வளத்துறை செயலாளரும் டெல்லி செல்ல உத்தரவிட்டேன்.
இதற்கிடையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக புதுவையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனே நிறைவேற்றி காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. நீரை பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துகளை தெரிவித்தன. இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய இரண்டையும் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினோம்.
மத்திய நீர்வளத்துறை கூட்டியிருந்த நேற்றைய கூட்டத்தில் தலைமை செயலாளர் பங்கேற்று புதுச்சேரி அரசின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள படி காரைக்காலில் 41 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் குறுவை சாகுபடி செய்வதற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழகமும், கேரளாவும் கூட உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தின. ஆனால் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றல் குழு ஆகிய இரண்டையும் அமைக்க ஆயத்தப்பணிகளை செய்யும்படிதான் கூறியுள்ளதாக கர்நாடகம் தெரிவித்தது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காலம் குறைவாக இருப்பதால் மத்திய அரசு தாமதிக்காமல் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு போகப்போகத்தான் தெரியும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தினால் மத்திய அரசு பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். டெல்டா பகுதியில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.