வாடிப்பட்டி அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை

வாடிப்பட்டி அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-03-10 21:00 GMT
வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த அய்யங்கோட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. டெய்லரான இவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய மகள் அமுதா (வயது 23).

 இந்தநிலையில் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார். ஏற்கனவே அமுதா கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது தந்தையுடன் வசித்து வந்தார். தற்போது தந்தையும் இறந்ததால் துக்கத்துடன் மனவேதனையில் இருந்து வந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்