ஒகி புயல் தாக்கி 100 நாள் நிறைவு: புதிய புயல் எச்சரிக்கையால் குமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கி நேற்றுடன் 100 நாள் நிறைவு பெற்றது. இந்த நிலையில் புதிய புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நாகர்கோவில்,
கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி குமரி கடலில் மையம் கொண்டிருந்த ஒகி புயலால் குமரி மாவட்டம் இதுவரை கண்டிராத பெருமளவு சேதத்தை சந்தித்தது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இவ்வாறு பலத்த சேதத்தை ஏற்படுத்திய ஒகி புயல் தாக்கி நேற்றோடு 100 நாள் நிறைவடைந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின்பேரில் தமிழக அரசு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. அதில், இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் காரணமாக மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். மன்னார் வளைகுடா மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த 2 நாட்களுக்கு இந்த பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் புயல் எச்சரிக்கை தகவலை கொடுத்தனர். மீனவ கூட்டுறவு சங்கங்கள், மீனவ கிராமங்களில் உள்ள பங்குத்தந்தையர்கள் மூலமாகவும், மீனவர் சங்கங்களின் வாயிலாகவும் நேற்று முன்தினம் இரவே தகவல் கொடுக்கப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலையில் மீன்பிடிக்கச் செல்ல இருந்த மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் அவர்களது விசைப்படகுகள், படகுகள், வள்ளம் போன்றவை கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஏற்கனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த மீனவர்களுக்கு அவர்களுடைய உறவினர்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக தகவல் கொடுத்து, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே குமரி மாவட்ட மீன்வளத்துறைக்கு நேற்று ஒரு எச்சரிக்கை தகவல் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் இந்திய பெருங்கடல் பகுதியில் மணிக்கு 55 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், மீனவர்கள் யாரும் நாளை (அதாவது இன்று) கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒகி புயலின் கோரத்தாண்டவம் முடிந்து சரியாக 100 நாள் நிறைவு பெற்ற நிலையில் மீண்டும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஒகி புயல் தாக்கி 100 நாள் ஆனதையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்கள் நேற்று சோகமயமாக காணப்பட்டன. ஒகி புயலின் போது நீரோடி, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, சின்னத்துறை, பூத்துறை, தூத்தூர் உள்பட 8 மீனவ கிராமங்களை சேர்ந்த 139 மீனவர்கள் கடலில் மாயமாகி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சின்னத்துறை கிராமத்தில், ஒகி புயலில் இறந்த மீனவர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், தூத்தூர் பகுதியில் உள்ள 8 மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு, புயலில் இறந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து மீனவ மக்கள் கூறியதாவது:-
கடலில் மாயமான மீனவர்கள் 100 நாட்களில் கரை திரும்பி வரவில்லை எனில் அவர்கள் இறந்ததாக கருதப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை எதையும் அரசு எடுக்கவில்லை. கடலில் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், புயலின் போது சேதமடைந்த விசைப்படகுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தென் தமிழக பகுதியில் புதிய புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் நாட்டுப்படகுகள் நேற்று கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற படகுகளும் கரைக்கு திரும்ப தொடங்கி உள்ளன. நேற்று தூத்துக்குடி கடல் பகுதியில் மிதமான காற்று வீசியது. அதிகபட்சமாக மணிக்கு 46 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.