குமரி மாவட்டத்தில் 10,428 பேர் எழுதுகிறார்கள்: காவலர் எழுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் வந்தன
குமரி மாவட்டத்தில் 10,428 பேர் எழுதுகிறார்கள்: காவலர் எழுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் வந்தன துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.
நாகர்கோவில்,
2017- 2018-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்), சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்) பணிகளுக்கான பொது எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் இந்த தேர்வை 10,428 ஆண், பெண்கள் எழுதுகிறார்கள். இதற்காக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி, பொன்ஜெஸ்லி கல்லூரி, இந்துக்கல்லூரி, ராஜாஸ் மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி, சுங்கான்கடை செயின்ட் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. என்ஜினீயரிங் கல்லூரி, குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயர்கல்வி நிலையம் ஆகிய 7 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் காவலர் தேர்வுக்கான வினாத்தாள்கள் நேற்று நாகர்கோவில் வந்தன. அவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த அறை பூட்டி சீல்வைக்கப்பட்டதோடு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இன்று காலை தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட உள்ளன. தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், தமிழ்நாடு சீருடைப்பணியாளர்கள் தேர்வாணைய துணைக்குழு தலைவருமான ஸ்ரீநாத் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.