கணவர் வேலைக்கு செல்லாததால் பெண் தற்கொலை

வெள்ளிச்சந்தை அருகே கணவர் வேலைக்கு செல்லாததால் மனைவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-03-10 22:15 GMT
ராஜாக்கமங்கலம்,

வெள்ளிச்சந்தை அருகே உள்ள மணவிளையை சேர்ந்தவர் மரிய ஜென்சன், கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுனா சார்லெட் (வயது 36). இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. மரிய ஜென்சனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும், போதிய வருமானம் இல்லாததால் குடும்ப செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் அமுனா சார்லெட் மிகவும் சிரமப்பட்டு வந்தார். அதோடு, கணவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதால் மிகவும் மன வருத்தத்துடன் காணப்பட்டார்.

தற்கொலை

இந்தநிலையில், நேற்று முன்தினம் அமுனா சார்லெட் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் வெள்ளிச்சந்தை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்