சிறுநீரக கோளாறால் மாணவி அவதி: தந்தையின் சிறுநீரகத்தை பொருத்தியும் தோல்வியில் முடிந்ததால் சோகம்
குரும்பலூர் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் சிறு நீரக கோளாறால் பாதிப்படைந்தார். தந்தையின் சிறுநீரகத்தை அவருக்கு பொருத்தியும் தோல்வியில் முடிந்ததால் குடும்பத்தினர் சோக மடைந்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கூத்தனூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கமுசலா. இவர்களுடைய மகள் லாவண்யா (19). இவர், பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல் கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் பருவதேர்வை எழுத ஆரம்பித்த சமயத்தில் திடீரென உடல் நலக்குறைவால் அவர் அவதியடைந்தார். இதையடுத்து பெரம்பலூர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது லாவண்யாவின் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் குடும்பத்தினரிடம் டாக்டர் கள் தெரிவித்தனர். இதையடுத்து தனது மகளுக்காக சிறுநீரகத்தை தானம் செய்ய சண்முகம் முன்வந்தார். எப்படியாவது தனது மகள் பூரணகுணமாகி கல்லூரிக்கு செல்ல வேண்டும் என டாக்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 25-ந்தேதி சண்முகத்தின் சிறுநீரகத்தை எடுத்து அவரது மகள் லாவண்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்து பொருத்தினர். இதையடுத்து ஆறுதலாக இருந்த சண்முகம் குடும்பத்திற்கு சிலநாட்களிலேயே பேரிடியாக ஒரு தகவல் வந்தது. லாவண்யாவுக்கு புதிதாக பொருத்தப்பட்ட சிறுநீரகமும் சரிவர இயங்காததால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வேதனையின் உச்சத்துக்கே சென்ற சண்முகம் கதறி துடித்தார். இதற்கிடையே லாவண்யாவும் உடல் மெலிந்து சோர்வுற்றார். பின்னர் டாக்டர்கள் ஆலோசனைப்படி புதிய சிறுநீரகம் லாவண்யாவுக்கு பெறுவதற்காக சென்னையில் பதிவு செய்தனர். அதில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் சண்முகம் குடும்பத்துக்கு முன்னதாக பதிவு செய்து காத்திருப்பதை அறிந்தனர். இதனால் சிறுநீரகம் கிடைக்க சுமார் 1½ ஆண்டாவது ஆகும் என அந்த சிறுநீரக மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக பணசெலவும் அதிகமாகிவிட்டதால் செய்வதறியாது திகைத்துப்போன சண்முகம், தனது மகளை அழைத்து கொண்டு வந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டார். அங்கு அவருக்கு தற்காலிகமாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரக கோளாறால் உயிருக்கு போராடும் தனது மகளுக்கு தமிழக அரசு முன்வந்து, அந்த சிறுநீரக மையத்தில் சீனியாரிட்டி படி அல்லாமல் முன்னுரிமை கொடுத்து சிறுநீரகம் பெற்றுத்தர வேண்டும். மேலும் முறையான அறுவை சிகிச்சை லாவண்யாவுக்கு செய்து குணப்படுத்த சுகாதாரத்துறையும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என சண்முகம் குடும்பத்தினர் சோகத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தங்களது தோழியின் நிலையை அறிந்த அந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் வந்து லாவண்யாவை பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர்.