கடையம் அருகே கத்திக்குத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு கொலை வழக்காக மாற்றம்
கடையம் அருகே, கத்திக்குத்தில் காயம் அடைந்த தொழிலாளி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
கடையம்,

முன்விரோதம்
நெல்லை மாவட்டம் ஆவுடையானூர் அருகில் உள்ள ராயப்பநாடானூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் அதே பகுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் ஜெயமுருகன் (வயது 36), வெள்ளைப்பனையேறிபட்டியை சேர்ந்த கணபதி மகன் முகேஷ் (24), தங்கபாண்டியன் மகன் மாரிமுத்துபாண்டி ஆகியோரும் வேலை செய்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து அவர்களுக்குள் பந்தயம் வைத்துள்ளனர். இதையடுத்து கடந்த புத்தாண்டு அன்று ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உருவானது.
கத்தியால் குத்தினர்
பின்னர் பொங்கல் விடுமுறைக்கு வந்த ஜெயமுருகன், ஜெயக்குமார், முகேஷ், மாரிமுத்துபாண்டி ஆகியோர் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று மது அருந்தினர். பின்னர் வெளியே வரும் போது முன்விரோதம் காரணமாக ஜெயமுருகனை மற்ற 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ஜெயமுருகன், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி ஜெயக்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முகேஷ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயக்குமார் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
சாவு
இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஜெயமுருகன் உயிரிழந்தார். இதையடுத்து கடையம் போலீசார் இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி தலைமையிலான போலீசார் தலைமறைவாக உள்ள மாரிமுத்துபாண்டியை தேடி வருகின்றனர்.