அய்யாக்கண்ணுவை கைது செய்யக்கோரி திருச்செந்தூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

அய்யாக்கண்ணுவை கைது செய்யக்கோரி திருச்செந்தூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-10 21:00 GMT
திருச்செந்தூர்,

அய்யாக்கண்ணுவை கைது செய்யக்கோரி திருச்செந்தூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூரில் பா.ஜ.க. மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாளை விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தாக்கியதாக கூறியும், எனவே அய்யாக்கண்ணுவை கைது செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்று திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிவமுருக ஆதித்தன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் காந்தி, மாநில மகளிரணி பொறுப்பாளர் உமா ரகுராஜன், மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜக்கண்ணன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோ‌ஷம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாலாஜி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கனகராஜ், லங்காபதி, சிவராமன், மாவட்ட செயலாளர் வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்