பாவூர்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
பாவூர்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
விவசாயி
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலஅரியப்பபுரம் நாடாகண்ணுபட்டியை சேர்ந்தவர் கைக்கொண்டான் (வயது 67), விவசாயி.
இவருக்கு எல்லைப்புள்ளி அருகே உள்ள இடையன் குளத்தில் விவசாய நிலம் உள்ளது. அதில் தற்போது நெல் பயிரிட்டுள்ளார். இந்த நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் காலையிலே வயலுக்கு சென்று மோட்டார் போடுவது வழக்கம்.
மோட்டார் போட்டதில் மின்சாரம் பாய்ந்தது
அதேபோல் நேற்று காலையிலும் வயலுக்கு சென்று மோட்டார் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கைக்கொண்டான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைக்கொண்டானுக்கு அமிர்தமணி என்ற மனைவியும், பொன்சுமதி, பொன் ஹேமா ஆகிய 2 மகள்களும், பொன் செந்தில் நடராஜா என்ற மகனும் உள்ளனர்.