இளம்பெண் தற்கொலை: போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்ததாக 13 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் உடலை போலீசுக்கு தெரிவிக்காமல் எரித்ததாக 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொண்டையம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்கனி. இவரது மகள் நந்தினி (வயது 20). இவர் கடந்த 8–ந்தேதி கோச்சடையில் உள்ள தனது தாத்தா வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் போலீசுக்கு தெரிவிக்காமல் மயானத்தில் தீ வைத்து எரித்து விட்டனர்.
இது குறித்து இலந்தைக்குளம் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜ், நத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீசார் அந்த இளம்பெண்ணின் உறவினர்கள் குருசாமி, முத்தையா, ரவி, வீரணன், இளங்கோ, சீனிவாசன், அய்யணன், சின்னச்சாமி, பால்பாண்டி, சந்திரன், மணிகண்டன், பிச்சை, சந்தோஷ் ஆகிய 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.