ஸ்ரீமுஷ்ணத்தில் எச்.ராஜா உருவபொம்மையை எரித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எச்.ராஜா உருவபொம்மையை எரித்து ஸ்ரீமுஷ்ணத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-09 22:15 GMT
ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஏழைகள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் என்.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய அவை தலைவர் கே.ஆர்.கே. கோவிந்தராஜன், ஏழைகள் முன்னேற்ற கழக நிறுவனர் எம்.ஏ.டி. அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாயிகள் சங்க மாவட்டக்குழு பிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ரவி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில அமைப்பு குழு உறுப்பினர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் தி.மு.க. நிர்வாகிகள் தங்க.கிருஷ்ணமூர்த்தி, திருஞானம், சுப்பிரமணியன், பத்மநாபன், சதீஷ்குமார், செல்வகுமார், செந்தில்வேலன், முத்துராமலிங்கம், சிவசண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் குப்புசாமி, சின்னையா, சக்திவேல், வீரமணி, காங்கிரஸ் மாயவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்