விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்த அனுமதிக்கக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்த அனுமதிக்கக்கோரி சிவகங்கையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
சிவகங்கையில் மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் உயர்த்தப்பட்ட தேர்வு பணிக்கான உழைப்பூதிய அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணியை வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் முடியும்படி அறிவிக்க வேண்டும்.
அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கும், வழித்தட அலுவலர், பறக்கும்படை உறுப்பினர், கூடுதல் துறை அலுவலர் ஆகியோர்களுக்கும் பணியிடங்களை வழங்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்த அனுமதிக்க வேண்டும். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை விலையில்லா சைக்கிள் வழங்கவில்லை.
எனவே அந்த மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக விலையில்லா சைக்கிள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சிவகுமார் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் இளமாறன், மாவட்ட பொருளாளர் சுரேஷ்கண்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் கருப்பையா, தமிழ் நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டாதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் இளங்கோ, மாவட்ட துணைத் தலைவர் ராமராஜ் மற்றும் செல்வகுமார் குமரேசன் மற்றும் ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.