குடியிருப்புகளை காலி செய்யும் உத்தரவை திரும்ப பெறக்கோரி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூரில், குடியிருப்புகளை காலி செய்யும் உத்தரவை திரும்பப்பெறக்கோரி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள அய்யன்நகர், செல்லம் நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதியில் உள்ள பல ஏக்கர் நிலம் திருப்பூர் விஸ்வேஸ்வரசாமி கோவில், நல்லூர் விஸ்வேஸ்வரசாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான நிலம் என்றும், எனவே உடனடியாக இங்கு குடியிருந்து வரும் பொதுமக்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் திருப்பூர் பெருமாள் கோவில் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உதவி ஆணையர் ஹர்சினியிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக இந்த பகுதியில் குடியிருந்து வருகிறோம். திருப்பூர் மாநகராட்சி மூலமாக அனைத்து அடிப்படை வசதிகளான குடிநீர், மின் இணைப்பு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கே.வி.ஆர்.நகர், அய்யன்நகர், செல்லம்நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் குடியிருப்புகளை காலி செய்து தருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது இந்த பகுதி கோவிலுக்கு சொந்தமான இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் குடியிருப்புகளை காலி செய்யும் உத்தரவை திரும்ப பெறுவதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆணையர், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தின் போது வெயிலின் தாக்கத்தால் பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.