காரைக்காலில், இன்று உலக மகளிர் தினவிழா கொண்டாட்டம்: கவர்னர் கிரண்பெடி பங்கேற்கிறார்
காரைக்கால் மாவட்டத்தில், இன்று (சனிக்கிழமை) காலை உலக மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது. இதில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
காரைக்கால்,
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், காரைக்கால் மாவட்டத்தில், இன்று (சனிக்கிழமை) காலை உலக மகளிர் தினவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது. விழாவில் புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இதில் முதல் நிகழ்ச்சியாக, காரைக்கால் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உலக மகளிர்தின விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்து அவரும் சைக்கிளை ஓட்டியபடி ஊர்வலமாக செல்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவர்னர் கிரண்பெடி இன்று காலை 6.30 மணிக்கு காரைக்கால் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்கு வருகிறார். அண்ணா கல்லூரி வளாகத்தில் தொடங்கும் இந்த சைக்கிள் ஊர்வலம் காரைக்கால் பாரதியார் வீதி வழியாக சென்று, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நிறைவு பெறுகிறது.
பின்னர் அங்குள்ள காமராஜர் திடலில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4-வது பட்டாலியன் பிரிவினர் நடத்தும் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை, கவர்னர் பார்வையிட்டு உரையாற்றுகிறார்.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
தொடர்ந்து, காரைக்கால் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் 1800 பள்ளி மாணவிகளுடன் நடைபெறும் உலக மகளிர் தினவிழா கொண்டாட்டத்தில், கவர்னர் கிரண்பெடி பங்கேற்று உரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக் கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், அசனா, கீதா ஆனந்தன், சந்திரபிரியங்கா, டி.ஐ.ஜி. சந்திரன், மாவட்ட கலெக்டர் கேசவன், இயக்குனர் யஸ்வந்தையா, மாவட்ட குழந்தைகள் நல திட்ட அதிகாரி சத்யா மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.