2-வது கட்டமாக 1 லட்சத்து 33 ஆயிரத்து 127 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து, கலெக்டர் லதா தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் 2-வது கட்டமாக 1 லட்சத்து 33ஆயிரத்து 127 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஆண்டிற்கு 2 முறை தமிழக அரசு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தி அதில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி வருகிறது.
இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் 2-வது கட்டமாக நாளை (ஞாயிற்றுக் கிழமை) பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த முகாம் மூலம் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 33ஆயிரத்து 127குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர் நல மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்பட 1,192 நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் 61 நடமாடும் மையங்கள் மற்றும் 17 பஸ் நிலையங்களில் தொடர்ந்து 3 நாட்களுக்கு செயல்படும் வகையில் முகாம் அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த முகாமில் அன்றைய தினம் காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த முகாம்களில் பொதுச் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, ஊட்டச்சத்து துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த 5ஆயிரத்து 500 பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர்.
மேலும் போலியோ சொட்டு மருந்தை குளிர்பதன நிலையில் பாதுகாத்து வைப்பதற்காக அன்ை-றைய தினம் மின்வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயை முற்றிலும் அகற்றுவதற்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.