எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி விழுப்புரத்தில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி விழுப்புரத்தில் அனைத்துக்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்,
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் தந்தை பெரியாரை அவமதித்து பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
இதில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ராதாமணி எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முஸ்தாக்தீன், சோசலிஸ்ட் யூனிட் சென்டர் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் அனவரதன், திராவிடர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் சாக்ரடீஸ் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.இதில் அனைத்துக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.