விதானசவுதாவுக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கண்டிப்பாக சோதனை நடத்த வேண்டும்

பெங்களூருவில் உள்ள லோக் அயுக்தா அலுவலகத்தில் புகுந்து நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் கர்நாடகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-03-07 23:02 GMT

பெங்களூரு,

பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்த நிலையில், விதானசவுதா, விகாச சவுதா மற்றும் முக்கியமான அரசு அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கண்டிப்பாக சோதனை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பெங்களூரு விதானசவுதா, விகாச சவுதா உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்களையும், அவர்களது உடைமைகளையும் கண்டிப்பாக போலீசார் பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு, பொதுமக்களை மெட்டல் டிடெக்டர் மூலமாக அரசு அலுவலகங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பொதுமக்களை முழுமையாக சோதனை செய்து அனுப்புவது போலீசாரின் பொறுப்பு மற்றும் கடமையாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்