கோடை காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் வழங்க முடியும்
கோடை காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க முடியும் என தலைமை பொறியாளர் தெரிவித்தார்.
மேட்டூர்,
கோடை காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் வழங்க முடியும், என்று தமிழக பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் தமிழக பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார் நேற்று பருவகால ஆய்வு மேற்கொண்டார். அப்போது அணையில் இடதுகரை, வலதுகரை, ஆய்வு சுரங்கம், கவர்னர் பாய்ண்ட் உள்பட அணையின் முக்கிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அணைக்கு நீர்வரும் பாதையான பாலாறு பகுதிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு 2 லட்சத்து 9 ஆயிரம் கனமீட்டர் வண்டல் மண் மேட்டூர் அணை நீர்தேக்க பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அணையின் நீர்தேக்க கொள்ளளவு அதிகரித்து உள்ளது. தற்போது இருக்கும் அணை நீர் இருப்பை வைத்து கோடை காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க முடியும். அணை நீர்தேக்க படுகையில் தண்ணீரை யாரும் திருட்டுத்தனமாக எடுக்காமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.
இந்த ஆய்வின்போது சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார், மேட்டூர் நிர்வாக பொறியாளர் சுப்பிரமணியம், உதவி நிர்வாக பொறியாளர் வசந்தன், அணை பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.