ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திட்ட பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

Update: 2018-03-07 22:15 GMT
தர்மபுரி,

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்குமரன், மாவட்ட தணிக்கையாளர் சங்கர், மாவட்ட இணைசெயலாளர்கள் சதீஷ்குமார், சரவணன், வட்ட பொருளாளர் ஈஸ்வரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டதலைவர் சுருளிநாதன், வேளாண்மைதுறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாநிலதலைவர் யோகராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் திட்டபணிகளை நிறைவேற்றிட உரிய கால அவகாசம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதேபோல் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்