தஞ்சையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் 140 பேர் பங்கேற்பு

தஞ்சையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு 1 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 140 பேர் கலந்து கொண்டனர்.

Update: 2018-03-07 22:45 GMT
தஞ்சாவூர்,

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் திறந்தவெளி கழிப் பிடமற்ற மாவட்டத்தினை நிலைத்த நீடித்த தன்மை பேணுதல், அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தொடக்க விழாவில் வட்டார வளர்ச்சி அதிகாரி சூரியநாராயணன் வரவேற்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தூய்மை இந்தியா இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றியத்திற்கு 10 பேர் வீதம் 140 பேர் கலந்து கொண்டனர்.

இதில் சுகாதாரத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் பொறுப்புகளும், கடமைகளும், சுகாதார திட்டம் மற்றும் கோட்பாடுகள், திறந்த வெளி கழிப்பிடமற்ற மாவட்டத்தினை நிலைத்த நீடித்த தன்மை பேணுதல் போன்ற தலைப்புகளில் பலர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு கட்டுரை, கவிதை, பாட்டுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பாலன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார், கூடுதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தில்லைமணி, ஊக்குவிப்பாளர் ஹனிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ரமேஷ் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்