பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து போராட்டம்
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து புதுவையில் போராட்டங்கள் நடந்தன.
புதுச்சேரி,
பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து கூறிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக தமிழகம்-புதுவையில் நேற்று போராட்டங்கள் நடந்தன. புதுவை பிள்ளைத்தோட்டத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் எச்.ராஜாவின் உருவபொம்மையை சவப்பாடைகட்டி ஊர்வலமாக எடுத்து சென்றனர். ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட அந்த பாடையை அவர்கள் கழிவுநீர் செல்லும் உப்பணாற்றில் தூக்கி வீசினார்கள். அப்போது எச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் கோகுல்காந்திநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பஸ் நிலையம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், முன்னவன், எழில்மாறன் உள்பட பலர் கலந்துகொண்டு எச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதற்கிடையே அவர்கள் எச்.ராஜாவின் உருவப்படத்தை தீயிட்டு கொழுத்த முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த உருளையன்பேட்டை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளு-முள்ளு நடந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக மறைமலையடிகள் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தினர் பெரியார் சிலை அருகே எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்தனர். மேலும் எச்.ராஜாவின் படத்தை பெரியார் சிலையின் கால் பகுதியில் கட்டி வைத்தனர். அதை போலீசார் அகற்றினார்கள். இது தொடர்பாக பெரியார் சிந்தனையாளர் இயக்க தலைவர் தீனா, துணை அமைப்பாளர் கர்ணா மற்றும் நிர்வாகிகளை உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கைது செய்தனர்.
எச்.ராஜாவை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும், இந்திய வாலிபர் சங்கம் சார்பில் பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் சங்க தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் விண்ணரசன், கவியரசன், ஜெயப்பிரகாஷ், வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காரைக்கால் பஸ் நிலையம் அருகில், நேற்று காலை, மாவட்ட தி.க., தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று திரண்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் எச்.ராஜவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். நகர போலீசார் விரைந்து சென்று உருவபொம்மையை கைப்பற்றி அப்புறப்படுத்தினர்.
போலீசாரின் எச்சரிக்கையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியலால் காரைக்கால் - புதுச்சேரி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.