நம்பியூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நம்பியூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திணிக்கப்படும் பணி நெருக்கடியை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நம்பியூர்,
நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மதிய உணவு இடைவேளையின்போது ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திணிக்கப்படும் பணி நெருக்கடியை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நம்பியூர் வட்டார தலைவர் வி.கே.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளர் ம.வெ.பாவேசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அர்த்தநாரீஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.