ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்,
ஊராட்சிப் பகுதிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் வீடுகளில் மானியத்தில் தனிநபர் கழிப்பறைகள் கட்டுதல், பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுதல், மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கண்மாய், குளங்கள் ஆழப்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட வில்லை என்று கூறி மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் அழகு பாண்டி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர்கள் சோனாபாய், முருகன், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் உதயகுமார், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநில துணைத்தலைவர் விஜயபாஸ்கர், சங்க மாவட்ட செயலாளர் பாலாஜி, மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சந்திர சேகரன் நன்றி கூறினார்.