மேட்டுப்பாளையம் பகுதியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மேட்டுப்பாளையம் பகுதியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எச்.ராஜாவை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. நகர அவைத்தலைவர் சி.தமிழ்மணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அஷரப் அலி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வேலுசாமி, பொதுக்குழு உறுப்பினர் சாலைவேம்பு சுப்பையன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் பா.ராமச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் அக்பர் அலி, நகர செயலாளர் அப்துல் ஹக்கீம், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் தங்கமணி, தமிழ் புலிகள் மாவட்ட மாணவர் அணி செயலாளர் அனித் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தி.மு.க. நகர பொருளாளர் லக்கி ஜாகிர் நன்றி கூறினார்.
இதேபோல காரமடை கார் ஸ்டேண்டு திடலில் நகர தி.மு.க. செயலாளர் வெங்டேசன் தலைமையில் எச்.ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு காரமடை ஒன்றிய செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். அதில் எச்.ராஜாவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. காரமடை அருகே தாயனூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், காரமடை வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், ம.தி.மு.க. செயலாளர் ராஜமாணிக்கம், திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் ஏ.எம்.ராஜா உள்பட 43 பேர் கலந்துகொண்டனர்.
பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று மாலை பொள்ளாச்சி காந்திசிலை அருகே தி.மு.க.நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு நடந்தது. இதில் நகர துணை செயலாளர் கார்த்திகேயன், தி.மு.க. நிர்வாகிகள் நவநீதகிருஷ்ணன், போர்வெல் துரை, கருப்பையா, சுப்பிரமணி, தி.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் உருவப்பொம்மை எரிக்க முயன்றதாக 13 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர். இதேபோல், ஆனைமலை முக்கோணத்தில் திராவிடர் விடுதலை கழகம் நகரசெயலாளர் அரிதாசு தலைமையில்நடந்த ஆர்ப்பாட்டத்தில், டி. டி.வி.தினகரன் அணி ஒன்றிய செயலாளர் சாந்தலிங்க குமார், தமிழ்நாடு திராவிடர் கழகம் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.