பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து தெரிவித்த எச்.ராஜாவை கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைமறியல்
பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து தெரிவித்த எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.
சென்னை,
பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா, தன்னுடைய முகநூல் பதிவில் சாதி வெறியர் ஈ.வே.ரா.(பெரியார்) சிலை உடைக்கப்படும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு நேற்றுமுன்தினம் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழர் அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து தெரிவித்த எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டம், சாலை மறியல், உருவ பொம்மை எரிப்பு சம்பவங்கள் வலுத்து வருகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலும் நேற்று பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் அமைப்புகள், பெரியார் ஆதரவாளர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டங்களை நடத்தினார்கள்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை அருகே பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாக்கியம், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் தலைவர் எம்.எம்.ஆர்.மதன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, புரட்சிகர இளைஞர்கள் பாசறை பொதுச்செயலாளர் ஜெகன், மாணவர் சங்க கூட்டமைப்பு திலீபன் ஆகிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கு பெற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் எச்.ராஜாவின் 2 உருவ பொம்மைகளை எரிக்க முயன்றனர். போலீசார் உருவபொம்மைகளை போராட்டக்காரர்களிடம் இருந்து பறிக்க முயற்சித்தனர். அப்போது போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் போராட்டக்காரர்களில் சிலர், போலீசார் அமைத்து இருந்த தடுப்புவேலியையும் தாண்டி, திடீரென்று பெரியார் சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட தொடங்கினார்கள். போராட்டக்காரர்கள் சாலையில் படுத்துக் கொண்டு எச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சாலைமறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.
எச்.ராஜாவை கண்டித்து சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எச்.ராஜாவை கைது செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் எஸ்.குணசேகரன் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதேபோல், எச்.ராஜாவை கண்டித்து சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில தலைவர் முகுந்தன் தலைமையில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம், பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய இயக்கங்களை சேர்ந்தவர்கள் வந்தனர்.
சென்னை தியாகராய சாலையில் உள்ள ம.பொ.சி. சிலை அருகில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து, திரளாக இருந்த அவர்கள் அனைவரும் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதோடு, எச்.ராஜா உருவப்படத்தையும் செருப்பால் அடித்தனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களை அகற்ற போலீசார் முற்பட்டபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை ஒருவருக்கு ஒருவர் கைகளை இணைத்து சாலையில் படுத்துக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 70 பேரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.