சென்னை புறநகர் பகுதியில் எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
எச்.ராஜாவை கைது செய்யக்கோரி சென்னை புறநகர் பகுதியில் தி.மு.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எச்.ராஜா உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.;
திருவொற்றியூர்,
பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து வெளியிட்ட பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் சென்னை புறநகர் பகுதிகளில் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் தேரடியில் பகுதி செயலாளர் தனியரசு தலைமையில் தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் எச்.ராஜா உருவபொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்து தேரடியில் வைத்து எரித்தனர். இதில் பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் பஸ்நிலையம் அருகே வட்ட செயலாளர் சொக்கலிங்கம் தலைமையில் எச்.ராஜா உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட செயலாளர் ஆதிகுருசாமி, அவை தலைவர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராயபுரம் சிக்னல் அருகே பகுதி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பூர் தொகுதி தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் ஜெயராமன் தலைமையில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் எச்.ராஜாவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் வியாசர்பாடி போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பெரம்பூர் தொகுதி வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர் முருகன் தலைமையில் கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் 80-க்கும் மேற்பட்டோர் எச்.ராஜா உருவபொம்மை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்.கே.நகர் தொகுதி சார்பில் கிழக்கு பகுதி செயலாளர் மருதுகணேஷ் தலைமையில் தொகுதி தலைவர் அனிபா உள்பட 200 பேர் வண்ணாரபேட்டை தபால் நிலையம் அருகே எச்.ராஜாவின் உருவபொம்மை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தண்டையார்பேட்டை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க. நகர் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, பா.ரங்கநாதன் தலைமையில் கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் ஐ.சி.எப்.முரளி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் எச்.ராஜாவின் உருவபடத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அனைவரையும் கைது செய்ய முயன்றனர். இதனால் தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் நாகராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர். எச்.ராஜா உருவ படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திரு.வி.க. நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி பாலம் அருகில் திரு.வி.க நகர் தெற்கு பகுதி செயலாளர் எம்.சாமிகண்ணு தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டோர் எச்.ராஜா உருவ படத்தை எரித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர்.
அதேபோல் திரு.வி.க. நகர் தொகுதிக்கு உட்பட்ட பட்டாளம் அம்பேத்கர் கல்லூரி சாலை சந்திப்பில் பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் எச்.ராஜாவுக்கு எதிராக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து எச்.ராஜா உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தேவஅருள்பிரகாசம் தலைமையில் தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் மற்றும் நிர்வாகிகள் பொற்செழியன், பூவிழி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.