புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 20,626 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 20,626 பேர் எழுதினர். மேலும் 268 பேர் தேர்வு எழுதவரவில்லை.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இந்த தேர்வினை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 21 ஆயிரத்து 438 மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். பிளஸ்-2 பொதுத்தேர்வு போல பிளஸ்-1-க்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது.
இந்த தேர்வினை எழுத புதுக்கோட்டை மாவட்டத்தில் 20,894 மாணவ, மாணவிகள் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து நேற்று தொடங்கிய பிளஸ்-1 தமிழ் முதல் தாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் 20,626 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதேபோன்று தனித்தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 5 பேரும் தேர்வு எழுதினர்.
மேலும் 268 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் மொத்தம் 76 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 1045 அறை கண்காணிப்பாளர்களும், 78 முதன்மை கண்காணிப்பாளர்களும், 78 துறை அலுவலர்களும், 80 பறக்கும் படைகளும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதில் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ்-1 தேர்வை மாவட்ட கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தேர்வு மையங்களில் கால்குலேட்டர், கைபேசி, மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டிருந்தது.