வளையக்கரணை கிராமத்தில் பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை

வளையக்கரணை கிராமத்தில் பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2018-03-07 21:45 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள வளையக்கரணை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2008-ம் ஆண்டில் இருந்து நூலகம் இயங்கி வந்தது. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூலகத்திற்கு சென்று படித்து பயனடைந்து வந்தனர். ஆனால் தற்போது இந்த நூலகம் பூட்டியபடியே உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் நூலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து, செடிகள் முளைத்து மோசமான நிலையில் காணப்படுகிறது. 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் இந்த கிராமத்தில் நூலகம் மிக அவசியமானதாகும்.

எனவே நூலக கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளையக்கரணை கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்