ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-03-07 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர்களுக்கு, பதிவறை எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் என்றும், விதிமுறை மீறி இலக்கை எட்ட ஊழியர்களை வேலைசெய்ய அதிகாரிகள் வற்புறுத்துவதை கண்டிப்பதாகவும் கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் அன்பு தலைமைதாங்க, மாநில துணைத்தலைவர் சுமதி தொடங்கிவைத்து பேசினார். இதில் மாவட்ட இணை செயலாளர் நாஞ்சில்நிதி கோரிக்கைகளை விளக்கினார். முடிவில் ஊரக செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்